நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாகும் 25 வயது நடிகை.. SMS கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட்
SMS
சிவா மனசுல சக்தி படம் தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் என்பதை நாம் அறிவோம். ஜீவா, சந்தானம் - எம். ராஜேஷ் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் இப்படம் உருவானது.

இதன்பின், இவர்களுடைய கூட்டணியில் மீண்டும் எப்போது படம் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
மீண்டும் இணைந்த கூட்டணி
இந்த நிலையில், 16 வருடங்கள் கழித்து ஜீவா - எம். ராஜேஷ் - யுவன் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது என்கிற அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.

இப்படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. ஆனால், இப்படத்தில் சந்தானம் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளிவரவில்லை. இருந்தாலும் மீண்டும் SMS கூட்டணி அமைந்துள்ளது என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிகை இவானா நடிக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

லவ் டுடே படத்தின் மூலம் பிரபலமான இவானாவிற்கு அதன்பின் பெரிதாக பேர் சொல்லும் அளவிற்கு படங்கள் கிடைக்கவில்லை. தெலுங்கில் சிங்கிள் என்கிற படம் அங்கு நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.