நான் லெஸ்பியனா? மோசமாக பேசுபவர்களுக்கு விஜய் டிவி ஜாக்குலின் ஆவேச பதிலடி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் தான் ஜாக்குலின்.
இவர் பிரபல இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான "கோலமாவு கோகிலா" படத்தில் நடித்திருந்தார். ஆனால் இதன் பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. மேலும் இவர் "தேன்மொழி" என்ற சீரியலில் நடித்துள்ளார்.
நான் லெஸ்பியனா?
சமீபத்தில் ஜாக்குலின் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது தொகுப்பாளர் அவரிடம், "நீங்கள் லெஸ்பியன் என்று சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அதற்கு உங்கள் கருத்து என்ன?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பதில் அளித்த ஜாக்குலின், "மூன்று நண்பர்களுடன் சேர்ந்து போட்டோ போட்டாலும் தவறாக தான் கமன்ட் செய்வார்கள். ஏன் என்னை இந்த மாதிரி நினைக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் அறிவே இல்லை. அவர்களுக்கு என்ன அப்படி உறுத்துகிறது. என்னை மட்டும் இல்லை, இது போன்று பல பிரபலங்களையும் கூறுவார்கள்" என்று ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.
150 கோடியில் கட்டப்பட்டுள்ள தனுஷ் வீட்டின் வெளிப்புறத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க