தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் முழு பட்ஜெட் இவ்வளவா?
லாக் டவுன் தளர்வுகள் இருந்து நேரத்தில் திரையரங்குகளில் 50 % கூட்டத்துடன் வெளியான திரைப்படங்களில் ஒன்று தனுஷின் அசுரன்.
படத்தின் கதை அதிகமாக பேசப்பட ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக படம் செம ஹிட். விமர்சனம் மட்டுமில்லாது வசூலிலும் படம் பெரிய அளவில் லாபம் பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வரும் ஜுன் 18ம் தேதி நெட்ப்ளிக்ஸில் வெளியாக உள்ளது ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் பார்த்தே ரசிகர்கள் அதிகம் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
படத்தின் ரிலீஸிற்காக அனைவரும் வெயிட்டிங்.
தற்போது படத்தின் பட்ஜெட் குறித்தும் தனுஷின் சம்பளம் குறித்தும் ஒரு தகவல் வந்திருக்கிறது. அதாவது மொத்தமாக படம் ரூ. 65 பட்ஜெட் என்றும் நடிகர் தனுஷிற்கு சம்பளம் மட்டும் ரூ. 15 கோடி என்கின்றனர்.