எல்லாம் இதற்காக தான்.. கவர்ச்சி காட்டுவது பற்றி ஜான்வி சொன்ன ஷாக் பதில்
ஜான்வி கபூர்
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது இன்ஸ்டாக்ராமில் மிக மிக பாப்புலர் ஆன நடிகைகளில் ஒருவர். அவருக்கு 20 மில்லியனுக்கும் அதிகமாக ரசிகர்கள் அங்கு இருக்கிறார்கள்.
ஜான்வி கபூர் ஸ்ரீதேவியின் மகள் என்கிற அடையாளத்தோடு சினிமாவுக்கு வந்தாலும் தற்போது இன்ஸ்டாவில் அதிகம் கவர்ச்சி காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார்.
ஆனால் திரைப்படங்களில் கவர்ச்சி காட்டுவதில்லை, சாதாரண பெண் போலவே நடிக்கிறார். இரண்டுக்கும் அதிகம் வேறுபாடு இருக்கிறதே என பலரும் கூறுகிறார்கள். இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜான்வி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

எல்லாம் இதற்காக தான்..
"அந்த விஷயத்தை நான் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. நான் சோஸியல் மீடியாவில் இருப்பது funக்காக தான்."
"நான் பார்க்க கியூட்டாக இருந்து, இன்னும் அதிகமாக ஐந்து பேர் என் போட்டோக்களை லைக் செய்தால், எனக்கு இன்னொரு பிராண்ட் (விளம்பரம்) கிடைக்கும், அதை வைத்து என்னுடைய இஎம்ஐ முன்பைவிட ஈசியாக கட்ட முடியும்" என கூறி இருக்கிறார்.


