ரசிகர்கள் கொண்டாடும் ஜெய் பீம் படத்தில் ஹிட் காட்சியில் நடித்த குழந்தைக்கு படத்தால் ஏற்பட்ட சோகம்- சூர்யா கவனிப்பாரா?
நடிகர் சூர்யா தனது சினிமா பயணத்தில் ஒரு தெளிவான ரூட்டில் சென்று கொண்டிருக்கிறார். அவரது படங்கள் எல்லாம் இப்போது மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆகி வருகின்றன.
காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் கதை அப்படி, இப்போது கூட இருளர் பழங்குடி மக்களின் கஷ்டங்களை பேசும் படமாக ஜெய் பீம் அமைந்துள்ளது. இப்படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் கமல்ஹாசன் என பலரும் படத்தை பாராட்டி வருகிறார்கள்.
இந்த படத்தில் சூர்யாவுடன் கால் மேல் கால் போட்டு ஒரு சிறுமி உட்கார்ந்திருக்கும் காட்சி படு பிரபலம். ஆனால் படத்தில் நடித்ததற்காக அந்த சின்ன குழந்தையை பள்ளியில் இருந்து நீக்கியுள்ளார்களாம்.
தகவலை ரியாஸ் என்ற நடிகர் வெளியிட பலரும் விவரம் முழுவதும் வெளியிடுங்கள் குழந்தைக்கு நல்லது செய்வோம் என பதிவிட்டு வருகிறார்கள்.
#JaiBhim ah ulagamey kondadura nerathula andha padathula nadicha indha Kolanthaya.Padikkura Schl la irundhu TC ah vaanga sollirukkanga ??♂️??♂️
— Riyaz A (@Riyaz_Ctc) November 3, 2021
Reason - Cinema la nadichathukkaga ?@Suriya_offl sir ?
Enga area la ulla Schl la than padikkuthu indha kolantha. pic.twitter.com/CPWEKPAion