ஜெய் பீம் பார்த்து கண்கலங்கிய கமல் ! அவரே பதிவிட்ட எமோஷனல் ட்வீட்..
சூர்யா நடிப்பில் இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம் அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இப்படத்தில் சொல்லப்பட்டுள்ள சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் ஆதரித்து ட்வீட் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஜெய் பீம் படத்தை பார்த்துள்ள கமல் இப்படம் குறித்து பதிவிட்டுள்ளார் "ஜெய் பீம் பார்த்தேன். கண்கள் குளமானது.பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் TJ ஞானவேல்.
பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்" என பதிவிட்டுள்ளார்.
#JaiBhim பார்த்தேன்.கண்கள் குளமானது.பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் @tjgnan பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த @Suriya_offl , ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். pic.twitter.com/YjSkfaeeiO
— Kamal Haasan (@ikamalhaasan) November 2, 2021