பிரபல ஹாலிவுட் திரைப்படம் Shawshank Redemption-ஐ பின்னுக்கு தள்ளி டாப் இடத்தை பிடித்த தமிழ் படம்!
இயக்குனர் ஃப்ராங்க் தராபான்ட் இயக்கி கடந்த 1994-ம் ஆண்டு டிம் ராபின்ஸ் மற்றும் மோர்கன் ஃபிரிமென் நடித்து வெளிவந்த திரைப்படம் The Shawshank Redemption.
இன்றுவரையும் பெரிதும் கொண்டாடப்படும் இந்தப்படம் Imdb-யின் டாப் rated படங்களின் வரிசையில் பல வருடங்களாக முதல் இடத்தில இருந்து வருகிறது.
இந்த நிலையில் தான் இந்த படத்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்திருக்கிறது சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம்.
நேற்று வரை Imdb ரேட்டிங் படி 9.8 புள்ளிகள் பெற்று டாப்பில் உள்ளது ஜெய் பீம். இந்த சாதனை மூலம் Imdb-யின் டாப் rated படங்களின் வரிசையில் முதல் இடத்தை பிடித்த முதல் தமிழ் படம் என்னும் சாதனையை படைத்திருக்கிறது.
இதனை தொடர்ந்து சமூக ஊடகங்களில் படக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.