ஜெய் பீம் சர்ச்சை.. வருத்தம் தெரிவித்த இயக்குநர் ஞானவேல்
சூர்யா நடிப்பில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி வெளியான படம் ஜெய் பீம்.
இப்படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு காட்சியினால் தற்போது வரை குறிப்பிட்ட ஒரு சமூகம், ஜெய் பீம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், இந்த விஷயத்திற்காக ரூ. 5 கோடி நஷ்டஈடாக தரவேண்டும் என்று அவர்கள் கூறியிருந்தனர்.
இதுமட்மின்றி, நடிகர் சூர்யாவை முதலில் எட்டி உதைக்கும் நபருக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று அந்த சமூகத்தை சார்த்த ஒருவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், இயக்குனர் ஞானவேல் இந்த பிரச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது வருத்தத்தை கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
இதில் குறிப்பிட்டு, ஒரு வரியில் " தனி மனிதராயோ, குறிப்பிட்ட சமூகத்தையோ, வமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை " என்று கூறி தனது வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
இதோ அவர் வெளியிட்ட முழு அறிக்கை..