அமேசான் பிரைமிற்கே நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ், ஜெய் பீம் படத்தின் புதிய விவகாரம்..
சமீபத்தில் ஜெய் பீம் படத்தில் குறிப்பட்ட சமூகத்தை தாக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்பட்டதாகவும், இதற்காக சூர்யா பதிலளிக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் கடிதத்தை சூர்யாவிற்கு அனுப்பியிருந்தார்.
பின் சூர்யா அவருக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் "எந்தவொரு தனிநபரையோ, சமுதாயத்தையோ அவதிக்கும் நோக்கம் ஒருபோதும் இல்லை. விளம்பரத்துக்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை" என குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது வன்னியர் சங்கம் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளதாகவும், இதற்கு நஷ்டஈடாக ரூ.5 கோடி கேட்டு சூர்யா, ஜோதிகா, TJ ஞானவேல், அமேசான் பிரைம் CEO உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.