ஜெய் பீம் படத்தில் வரும் நிஜ வாழ்க்கை சந்துரு யார் தெரியுமா? ரசிகர்களிடையே ட்ரெண்டிங் போட்டோ..
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜெய் பீம்.
பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் நேற்று இரவு நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகி இருந்தது.
மேலும் இப்படத்தின் ப்ரீவியூ ஷோ நேற்று முக்கிய சினிமா நட்சத்திரங்களுக்கு திரையிடப்பட்டது. பின்னர் ஜெய் பீம் குறித்து பலரும் புகழ்ந்து பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு வெளியானது முதலே இப்படத்தை இணையதள வாசிகள் கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே உண்மை சம்பவத்தை அடிப்படியாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில் சூர்யாவின் சந்துரு கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
அதன்படி ரசிகர்கள் தற்போது உண்மையான நீதிபதி சந்துருவின் புகைப்படத்தை நேற்றிலிருந்து இணையத்தில் பரப்பி வருகின்றனர்
