ஜெய் பீம் மற்றும் சார்பட்டா படங்களில் பாரதி கண்ணம்மா ரோஷினியா ! ரசிகர்களை அதிர்ச்சியாகிய தகவல்..
பிரபல விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் டாப் சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மாவாக தான் இருக்க முடியும்.
ஏகப்பட்ட ரசிகர்களை பார்வையாளராக வைத்துள்ள இந்த தொடரில் கண்ணம்மாவாக நடித்து வந்த நடிகை ரோஷினி, கண்ணம்மாவாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்த ரோஷினி திடீரென இந்த தொடரில் இருந்து விலகினார்.
அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வினுஷா தேவி என்பவர் கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரோஷினிக்கு சீரியலில் நடித்து கொண்டு இருக்கும் போதே நிறைய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாம். அதன்படி சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படத்தில் செங்கேணி வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.
மேலும் ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் மரியம்மாவாக நடிக்க முதலில் ரோஷினிக்கு தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.