"இதற்கு முன் நான் இப்படி பார்த்ததில்லை" - நடிகர் சூர்யாவின் உணர்ச்சிப்பூர்வமான பதிவு..
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் ஜெய் பீம்.
இப்படம் வெளியானது முதல் மிக சிறந்த விமர்சனங்களையும், அதே சமயம் பெரிய எதிர்ப்புகளையும் பெற்று வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் அரசியல் பிரமுகர் ஒருவர் சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு தருவதாக கூறியது, பெரிய சர்ச்சையாக மாறியது.
அவர் அப்படி கூறியதில் இருந்து ரசிகர்கள்களும் சினிமா நட்சத்திரங்களும் சூர்யாவிற்கு ஆதரவாக #westandwithsurya என்ற ஹாஷ் டேக்கை போட்டு குரல் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது சூர்யா அவரின் ட்விட்டர் பக்கத்தில் "ஜெய் பீம் திரைப்படத்திற்கு கிடைத்துள்ள அன்பு அலாதியானது. நான் இதற்கு முன் இப்படி பார்த்ததில்லை" என கூறி அனைவருக்கும் நன்றி சொல்லியுள்ளார்.