நடிகர் விஜய் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இந்தியாவில் பாப்புலாரிட்டியில் அவர் தான் நம்பர் 1 என ormax நிறுவனம் தொடர்ந்து பட்டியல் வெளியிட்டு வருகிறது.
ஜெய்
அதனால் விஜய் உடன் இணைத்து நடிக்க வேண்டும் என வளரும் நடிகர்கள் எல்லோருக்குமே ஒரு ஆசை இருக்கும். அப்படி விஜய் உடன் பல வருடங்களுக்கு முன்பு பகவதி படத்தில் நடித்தவர் ஜெய். அந்த படத்தில் விஜய்க்கு தம்பியாக அவர் நடித்து இருப்பார்.
அந்த படத்தின் ஷூட்டிங்கில் ஜெய் நடிக்கத்தெரியாமல் பல தவறுகள் செய்வாராம். அதனால் பல டேக் எடுக்க வேண்டிய நிலை வந்ததாம். ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருக்கும்போது செட்டில் சொன்னதை கேட்டு அப்படியே நடித்தாராம் ஜெய்.. அதை அவர்கள் பாராட்ட.. 'படமே முடிய போகுது' என விஜய் கலாய்த்தாராம்.
மீண்டும் இணைந்து நடிக்க ஆசை
சமீபத்தில் ஒரு பேட்டியில் இது பற்றி பேசிய ஜெய், தனக்கு மீண்டும் விஜய் உடன் இணைந்து நடிக்க ஆசை என கூறி இருக்கிறார்.
ஆனால் இந்த நிலையில் கேட்க முடியுமா என தெரியவில்லை என்றும் அவர் கூறி இருக்கிறார்.
அவரது ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் ஷெரினாவின் உண்மையான குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ