6 நாள் முடிவில் ஜெயிலர் 2 ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?
ஜெயிலர் 2
ஜெயிலர் 2, நடிகர் ரஜினி நடிக்க பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான திரைப்படம்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியான இப்படம் மாஸாக வெளியாகி இருந்தது.
ரஜினி படம் என்றால் சும்மாவா, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே திரையரங்கில் ஆஜர் ஆனது, முதல் நாள் முதல் காட்சியே பல பிரபலங்கள் ரசிகர்களுடன் இணைந்து பார்த்தார்கள். படத்தின் கதை, நெல்சன் இயக்கம், அனிருத் இசை என ஒட்டுமொத்தமாக படத்திற்கு கைகொடுக்க பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்தி வருகிறது.

வசூல் எவ்வளவு
படம் வெளியாகி 6 நாட்கள் ஆகிவிட்டது, தமிழகத்தை தாண்டி மற்ற மாநிலங்களிலும் படம் நல்ல வசூல் வேட்டை செய்துள்ளது.

6 நாள் முடிவில் மொத்தமாக படம் ரூ. 530 கோடிக்கு மேலான வசூல் செய்துள்ளது. தற்போது தமிழகத்தை தாண்டி மற்ற மாநிலங்களில் படம் செய்துள்ள வசூல் விவரத்தை காண்போம்.
- தமிழகம்- ரூ. 134 கோடி
- கேரளா- ரூ. 55 கோடி
- கர்நாடகா- ரூ. 56 கோடி
- ஆந்திரா, தெலுங்கானா- ரூ. 65 கோடி
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri
பிரான்சில் வார இறுதியில் மீண்டும் போராட்டங்கள்: காவல்துறைக்கு ஆதரவாக களமிறங்கும் ராணுவம் News Lankasri