விஜய்யின் கோட்டை கேரளாவில் லியோ பட வசூல் சாதனையை முறியடித்த ரஜினியின் ஜெயிலர் 2...
ஜெயிலர் 2
தமிழ் சினிமா ரசிகர்கள் கடந்த சில நாட்களாக எதிர்ப்பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படம் வெளியாகிவிட்டது.
கடந்த 2023ம் ஆண்டு ரஜினி முதன்முறையாக நெல்சன் திலீப்குமாருடன் கூட்டணி அமைத்து நடித்த திரைப்படம் ஜெயிலர். இப்படம் மக்களின் வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் நெல்சன்-ரஜினி கூட்டணி அமைய வெற்றிகரமாக ஜெயிலர் 2 படம் தயாராகியுள்ளது.

நேற்று அக்டோபர் 15 படம் மக்களின் பெரிய கொண்டாட்டத்துடன் வெளியாகிவிட்டது, விமர்சனங்களும் மாஸாக வருகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாளிலேயே இப்படம் உலகம் முழுவதும் ரூ. 130 கோடிககு மேலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
தற்போது நடிகர் விஜய்யின் கோட்டையாக பார்க்கப்படும் கேரளாவில் ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம் செம வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
முதல் நாள் முடிவில் விஜய்யின் லியோ பட வசூலை முறியடித்து ரூ. 12.5 கோடிக்கு மேலான வசூல் வேட்டை செய்துள்ளதாம்.