பாக்ஸ் ஆபிஸ்: முதல் நாள் Overseasல் ஜெயிலர் 2 பட வசூல் கணிப்பு, இத்தனை கோடியா?
ஜெயிலர் 2
தலைவரு நிரந்தரம் என தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படம் ரிலீஸ் ஆகிவிட்டது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சுராஜ், எஸ்.ஜே.சூர்யா, மிர்ணா மேனன், யோகி பாபு, நமோ நாராயணன், வித்யா பாலன், மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோ கேமியோ ரோலில் நடித்திருந்தனர்.
முதல் நாள் படமும் வெளியாகிவிட்டது, படத்தின் கதை, இயக்கம், அனிருத் இசை, ரஜினி நடிப்பு என அனைத்தும் தெறிக்குது என ரசிகர்கள் சூப்பர் சூப்பர் விமர்சனம் கொடுத்து வருகிறார்கள்.

வசூல் கணிப்பு
தற்போது இப்படம் முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு வசூலிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 110 முதல் ரூ. 120 கோடி வரை வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதோடு முதல் நாளில் ஓவர்சீஸில் மட்டுமே இப்படம் ரூ. 55 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என கூறப்படுகிறது.
