தமிழ்நாட்டில் ஜெயிலர் 2 திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல்
Jailer 2 tamilnadu first day box office: ரஜினி நடிப்பில் நேற்று வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் 2
2026-ஆம் ஆண்டு ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ஜெயிலர் 2. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவத்தி, சுராஜ், ரம்யா கிருஷ்ணன், மிர்னா, நமோ நாராயணன், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷரோப், விஜய் சேதுபதி, ஹ்ரித்திக் ரோஷன் என உச்ச நட்சத்திரங்கள் கேமியோ ரோலில் நடித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான ஜெயிலர் 2 விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், முதல் நாள் உலகளவில் ரூ. 130 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. உலகளவில் இவ்வளவு பெரிய வசூல் சாதனையை முதல் நாளில் செய்துள்ள ஜெயிலர் 2, தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? அதுகுறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு வசூல்
வசூல் மன்னன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் நாள் மட்டுமே ரூ. 24 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக தமிழ்நாட்டில் ரூ. 200 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
