ஜெயிலர் 2 தீபாவளி ஸ்பெஷல்.. யாரும் எதிர்பார்க்காத வீடியோ
ஜெயிலர் 2
இன்று தீபாவளி என்பதால், திரைப்படங்களின் அப்டேட் வெளிவரும் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான்.
இந்த நிலையில், ஜெயிலர் 2 படத்திலிருந்து வீடியோ ஒன்று படக்குழு வெளியிட்டுள்ளனர். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர் 2.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தீபாவளி ஸ்பெஷலாக அனைவரும் தங்களது படக்குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இதோ அந்த மேக்கிங் வீடியோ:
Wishing everyone a super Deepavali 🪔🎇😎 Here's a exclusive BTS from #Jailer2#HappyDeepavali pic.twitter.com/D1M4esKznG
— Sun Pictures (@sunpictures) October 20, 2025
ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து முதல் முறையாக பாலகிருஷ்ணா, எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் பகத் பாசில் இப்படத்தில் நடிப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகளும் இப்படத்தில் வருவார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இப்படம் வெளிவரும் என தகவல் தெரிவிக்கின்றன.