பாக்ஸ் ஆபிஸ்: 19 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
Jailer 2 Movie 19 days Box office: ஜெயிலர் 2 திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. முதல் நாளிலிருந்தே இப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது, எங்கே அதிக வசூல் என்பதை பற்றிய விவரங்களை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 19 நாட்களில் ஜெயிலர் 2 உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.
ஜெயிலர் 2
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியின் மூலம் பான்-இந்தியா அளவில் பிரபலமானார். இதை தொடர்ந்து இந்த ஆண்டு மாபெரும் அளவில் எதிர்பார்க்கப்பட்டு வெளியான ஜெயிலர் 2-வும் மெகா இண்டஸ்ட்ரி ஹிட் ஆகியுள்ள நிலையில், தமிழ் சினிமாவின் நம்பர் 1 இயக்குநராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். அடுத்ததாக ஹ்ரித்திக் ரோஷனை வைத்து படம் இயக்கப்போவதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

பாக்ஸ் ஆபிஸ்
ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் ஒவ்வொரு நாளும் புதிய வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில், 19 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் ஜெயிலர் 2-வின் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 19 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 810+ கோடி வசூல் செய்துள்ளது.

1000 கோடி சாத்தியமா
ரூ. 800 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வரும் ஜெயிலர் 2 ரூ. 1000 கோடி வசூல் செய்ய வேண்டும் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் ஏக்கமாக இருக்கிறது. கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரூ. 1000 கோடி வசூல் திரைப்படங்கள் வந்துவிட்டன.

ஆனால், தமிழ் சினிமாவிற்கு மட்டுமே ஏன் ரூ. 1000 கோடி வசூல் படம் சாத்தியமில்லை என்கிற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டது. அதற்கான விடையாக ஜெயிலர் 2 அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. பொறுத்திருந்து பார்ப்போம் ரூ. 1000 கோடி என்கிற மிகப்பெரிய இலக்கை பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலர் 2 தொடுமா என்று..
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan