பாக்ஸ் ஆபிஸ்: 25 நாட்களில் ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்
Jailer 2 Movie 25 days Tamil Nadu Box office: ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகி தமிழ் சினிமாவிற்கு மாபெரும் பெருமையை பாக்ஸ் ஆபிஸில் சேர்த்துள்ளது. இண்டஸ்ட்ரி ஹிட் என்ற சாதனை வந்த பிறகும் தொடர்ந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில், 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜெயிலர் 2, இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.
ஜெயிலர் 2
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு பெரிதும் எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், சிவராஜ் குமார், ஹ்ரித்திக் ரோஷன், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், நமோ நாராயணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

25 நாட்களில் செய்துள்ள வசூல்
ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வரும் நிலையில், தமிழ்நாட்டில் 25 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பற்றி தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த நிலையில், 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் தமிழ்நாடு வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 25 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் ரூ. 219 கோடி வசூல் செய்து தமிழக பாக்ஸ் ஆபிஸில் சென்சேஷனல் சாதனையை படைத்துள்ளது.

பொறுப்பு துறப்பு: ஜெயிலர் 2 திரைப்படத்தின் தமிழக வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.