பாக்ஸ் ஆபிஸ்: 4 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
Jailer 2 Box office: ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகி 4 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் 2
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளிவரும்போதெல்லாம், அப்படத்தின் வசூல் குறித்து தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருப்பார்கள்.

அந்த வகையில், கடந்த வாரம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் ஜெயிலர் 2-வின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

முதல் நாளே இப்படம் உலகளவில் ரூ. 130 கோடி வசூல் செய்தது. அதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம்.
பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில், 4 நாட்களில் உலகளவில் ஜெயிலர் 2 திரைப்படம் ரூ. 425 கோடி வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. கண்டிப்பாக நம்பர் 1 இடத்தை ஜெயிலர் 2 பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல பாலிவுட் நடிகரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகளை பிடிக்க 15 குழுக்கள் அமைப்பு News Lankasri