இதுவரை ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள ப்ரீ புக்கிங் வசூல், விவரம் இதோ
Jailer 2 Movie Pre booking Box office: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி நாளை வெளியாகவிருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. இப்படத்தின் ப்ரீ புக்கிங் அமோகமாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் 2
2026-ஆம் ஆண்டு இந்திய சினிமா ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ஜெயிலர் 2. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, சுராஜ், வித்யா பாலன், சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், மிர்னா, மிதுன் சக்ரவத்தி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ப்ரீ புக்கிங்
நாளை வெளியாகவிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் ப்ரீ புக்கிங் கலெக்ஷன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜெயிலர் 2 திரைப்படம் இதுவரையிலான ப்ரீ புக்கிங்கில் ரூ. 55 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. முதல் நாள் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.3,108 கோடி மதிப்பில் சென்னைக்கு குடிநீர் திட்டம் - முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டுகிறார் IBC Tamilnadu