ஜெயிலர் 2 முன்பதிவில் இதுவரை செய்துள்ள வசூல்.. முழு விவரம் இதோ
Jailer 2 Movie Pre booking Collection: ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம் வருகிற 15-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஜெயிலர் 2
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்ப்புடன் இப்படத்தை எடுத்துள்ளனர்.

இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன், சுராஜ், மோகன்லால், சிவராஜ்குமார், ஹ்ரித்திக் ரோஷன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கடந்த வாரம் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் நல்ல விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.
முன்பதிவு வசூல்
ஜெயிலர் 2 ரிலீஸாக இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், இப்படத்தின் முன்பதிவு களைகட்டி வருகிறது. அதன்படி, இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவில் இப்படம் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இதை வைத்து பார்க்கும்போது, கண்டிப்பாக முதல் நாளிலேயே உலகளவில் ரூ. 100 கோடி முதல் ரூ. 150 கோடி வரை ஜெயிலர் 2 வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.