ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் எப்போ? வெளிவந்த செம மாஸ் அப்டேட்
ஜெயிலர் 2
தமிழ் சினிமாவில் மாபெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் ஒன்று ஜெயிலர். உலகளவில் ரூ. 620+ கோடி வசூல் செய்திருந்தது. இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கிய இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
கடந்த 2023ம் ஆண்டு இப்படம் வெளிவந்து ப்ளாக் பஸ்டர் ஆனது. இதை தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இதற்காக அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு வீடியோவே செம மாஸாக இருந்த நிலையில், ஜெயிலர் 2 மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.
முதல் பாகத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷரோப், ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்த நிலையில், ஜெயிலர் 2வில் பாலகிருஷ்ணா, எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
ரிலீஸ்
இந்த நிலையில், ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கும் ஜெயிலர் 2 வருகிற 2026ம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவரும் என தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.