நெல்சன் இயக்கத்தில் மீண்டும் இணையும் ரஜினி.. நெல்சன் கொடுத்த அப்டேட் இதோ
ஜெயிலர்
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து, அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஜெயிலர் 2
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பேசிய நெல்சன் ஜெயிலர் இரண்டாம் பாகத்தின் அப்டேட் இன்னும் ஒரு மாதத்திற்குள் வரும் எனவும், இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் எனவும் கூறினார்.
தற்போது, ரஜினிகாந்த் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்து உள்ளார். அதைத்தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு ஜெயிலர் படத்தில் நடிப்பார் என எதிர்பாக்கப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
