All Time Record: தமிழகத்தின் நம்பர் 1 வசூல் சாதனை படைத்த ஜெயிலர் 2
Jailer 2 sets All Time Record in Tamil Nadu Box office: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட்டான ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் பிரம்மாண்ட சாதனையை பாக்ஸ் ஆபிஸில் படைத்துள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.
ஜெயிலர் 2
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 75 வயதிலும் உலகம் முழுவதும் பல ரெக்கார்ட் வசூல் சாதனைகளை படைத்துவிட்டார். நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 உலகின் அனைத்து இடங்களிலும் ஓடி முடிவடையும் நிலையில், தமிழகத்தில் ஜெயிலர் 2 தற்போது என்ன வசூல் செய்துள்ளது என்பதுதான் அனைவரின் கேள்வியும்.

நம்பர் 1 இடத்தில் ஜெயிலர் 2
ஜெயிலர் 2 தமிழகத்தில் ரூ. 225 கோடிகளை வசூல் கடந்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது. துவரை வந்த தமிழ் படங்களில் அதிகம் வசூல் செய்த பொன்னியின் செல்வன் வசூலை முறியடித்து, ஜெயிலர் 2 தமிழகத்தின் நம்பர் 1 வசூல் பெற்ற படமாக வந்துள்ளதை விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என பலரும் கொண்டாடி வருகின்றனர்.

அதோடு, தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் இந்த சாதனைக்காக சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை சந்தித்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.