பாக்ஸ் ஆபிஸ்: இலங்கையில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
Jailer 2 Sri Lanka Box office: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் இலங்கையில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதனை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.
ஜெயிலர் 2
ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால், உலகளவில் அப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் ஏற்கனவே பிளாக்பஸ்டர் ஆன திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்றால் சொல்லவே தேவையில்லை.

அப்படி, ரசிகர்களின் அளவில்லா எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. கடந்த மாதம் வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ் கிடைத்ததால், பாக்ஸ் ஆபிஸில் ஒவ்வொரு நாளும் புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது.
இலங்கை வசூல்
ஜெயிலர் 2 ஒவ்வொரு இடங்களிலும் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், ஜெயிலர் 2 இலங்கையில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்திய மதிப்பில் இலங்கையில் இப்படம் ரூ. 10 கோடி வரை வசூல் செய்துள்ளது. இது ஆல் டைம் ரெகார்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
