பாக்ஸ் ஆபிஸ்: இலங்கையில் ஜெயிலர் 2 ஒரு வாரத்தில் செய்துள்ள வசூல் விவரம்

By Tony Oct 22, 2026 05:40 AM GMT
Report

ஜெயிலர் 2

ஜெயிலர் 2 உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. திரையிட்ட இடமெல்லாம் திருவிழா போல் ஜெயிலர் 2 பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்: இலங்கையில் ஜெயிலர் 2 ஒரு வாரத்தில் செய்துள்ள வசூல் விவரம் | Jailer 2 Srilanka Box Office

இப்படம் தமிழகம் தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வரலாறு காணாத வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

இலங்கை வசூல்

இந்நிலையில் ஜெயிலர் 2 இலங்கையில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இலங்கை பொறுத்தவரை எப்போதும் ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும்; அதிலும் ரஜினி, விஜய் படங்கள் குறித்து சொல்லவே வேண்டாம், தற்போது இலங்கையில் ஜெயிலர் 2 ஒரு வாரம் ஓடிய நிலையில் இந்திய மதிப்பில் ரூ. 5.5 கோடி வசூல் செய்து பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: இலங்கையில் ஜெயிலர் 2 ஒரு வாரத்தில் செய்துள்ள வசூல் விவரம் | Jailer 2 Srilanka Box Office

மேலும், இப்படம் இலங்கையில் இந்திய மதிப்பில் ரூ. 10 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு விஜய்யின் கோட் ரூ. 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து நம்பர் 1 இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US