பாக்ஸ் ஆபிஸ்: தமிழ்நாட்டில் முதல் வார இறுதி வரை ஜெயிலர் 2 செய்துள்ள வசூல்
Jailer 2 Tamilnadu Box office: ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் வார இறுதி வரை செய்துள்ள மொத்த வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்ப்போம்.
ஜெயிலர் 2
நெல்சன் திலீப்குமார் - ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியில் உருவாகி கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் எவ்வளவு பெரிய வெற்றியடைந்து என்று சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

முதல் பாகத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின், அதே கூட்டணியில் ஜெயிலர் 2 பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு கடந்த வாரம் வெளியானது. ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற இப்படம், உலகளவில் வசூலை வாரிக்குவித்து வருகிறது.
தமிழ்நாடு வசூல்
இந்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் முதல் வாரத்தை பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த நேரத்தில், தமிழ்நாட்டில் இதுவரை இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜெயிலர் 2 முதல் வாரத்தின் இறுதி வரை தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 87 கோடி வரை வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 200 கோடியை தாண்டும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க அமெரிக்கா நிபந்தனைகளை ஏற்க வேண்டும் - ஈரான் வலியுறுத்தல் News Lankasri
அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப்: வேலை இழக்கும் அபாயம் News Lankasri