பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் செய்துள்ளது? விவரம் இதோ
Jailer 2 worldwide 10 days box office: ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் 10 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
ஜெயிலர் 2
ஜெயிலர் 2, ஜெயிலர் 2, ஜெயிலர் 2 எங்கு திரும்பினாலும் இப்படத்தை பற்றிய பேச்சுதான். ரஜினியின் மாஸ், நெல்சனின் தரமான இயக்கம், வசூல் விவரம் என ஜெயிலர் 2 குறித்து தொடர்ந்து ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நாளும் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். அதிலும், எப்போது ரூ. 1000 கோடி வசூல் வரும் என்பதை எதிர்பார்த்து தமிழ் சினிமாவே ஆவலோடு காத்திருக்கிறது.

உலகளவில் செய்துள்ள வசூல்
இந்த நிலையில், 10 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள ஜெயிலர் 2, உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 675 கோடி வசூல் செய்துள்ளது.

இதன்மூலம், ஜெயிலர் 1 படத்தின் மொத்த வசூலையும் முந்தியுள்ளது. மேலும், விரைவில் 2.0 படத்தின் வசூலையும் முறியடித்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆகவுள்ளது. அதனை தொடர்ந்து ரூ. 1000 கோடி வசூல் சாதனையும் செய்யும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.