பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 உலகளவில் 15 நாட்களில் செய்துள்ள வசூல்
Jailer 2 worldwide 15 days box office: ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் 15 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
ஜெயிலர் 2
2026-ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ஜெயிலர் 2. அத்தகைய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் முதல் நாளிலிருந்தே வசூலில் பல சாதனைகளை படைத்தது. மேலும், 10 நாட்களுக்குள் ரூ. 700 கோடியை தாண்டி தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக மாறியுள்ளது.

இதன் மூலம் 1999-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 7 இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படங்களை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்துள்ளார். ரூ. 700 கோடியை தாண்டியும், நிற்காமல் வசூல் வேட்டையாடி வருகிறது ஜெயிலர் 2.

பாக்ஸ் ஆபிஸ்
வசூல் இந்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் 15 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் இப்படம் 15 நாட்களில் ரூ. 775 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
