பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் ஜெயிலர் 2 உலகளவில் செய்துள்ள வசூல்
Jailer 2 worldwide 18 days Box office: ஜெயிலர் 2 திரைப்படம் ரூ. 700 கோடியை கடந்து, 2.0 படத்தின் வசூல் சாதனையை முறியடித்து தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட்டாகியுள்ளது. இப்படத்தின் வசூல் விவரங்களை நாம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில், 18 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
ஜெயிலர் 2
தமிழ் சினிமாவை தாண்டி இன்று இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார் நெல்சன் திலீப்குமார். அதற்கு முக்கிய காரணம், ஜெயிலர் மற்றும் ஜெயிலர் 2. முதல் பாகம் எவ்வளவு பெரிய வெற்றி என்பதை சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை. அந்த வெற்றியை தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி கடந்த அக்டோபர் மாதம் வெளியானது ஜெயிலர் 2.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், சிவராஜ்குமார், ஹ்ரித்திக் ரோஷன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, நமோ நாராயணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதில், மூர்த்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் நடிகர் நமோ நாராயணன்.

பாக்ஸ் ஆபிஸ்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் கண்டிப்பாக அப்படம் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளை படைக்கும். அந்த வகையில், ஜெயிலர் 2 திரைப்படம் ஒவ்வொரு நாளும் புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது.

இந்த நிலையில், 18 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் ஜெயிலர் 2, உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் 18 நாட்களில் இப்படம் ரூ. 800+ கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் முதல் தமிழ் திரைப்படமாக பாக்ஸ் ஆபிஸில் 800 கோடி என்கிற இலக்கை தொட்டுள்ளது. ரூ. 1000 கோடி என்கிற சாதனையை இனி வரும் நாட்களில் ஜெயிலர் 2 படைக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri