பாக்ஸ் ஆபிஸ்: 20 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
Jailer 2 Worldwide 20 Days Box Office: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படத்தின் வசூல் விவரங்களை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 20 நாட்களில் உலகளவில் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.
ஜெயிலர் 2
பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிதும் எதிர்பார்ப்புடன் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. நெல்சன் - ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியில் உருவான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்க, நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து கொண்டே போனது.

தமிழ் சினிமாவில் இதற்கு முன் 2.0 திரைப்படம்தான் ரூ. 700 கோடி வசூலுடன் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படம் என்கிற சாதனையை படைத்தது. அதனை, ஜெயிலர் 2 ரிலீசாகி 10 நாட்களில் முறியடித்து புதிய இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறியுள்ளது.
வசூல் விவரம்
ஜெயிலர் 2 உலகளவில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு வசூல் செய்து வருகிறது என்கிற விவரத்தை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 20 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள ஜெயிலர் 2 உலகளவில் ரூ. 820+ கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
