பாக்ஸ் ஆபிஸ்: 25-வது நாளில் ஜெயிலர் 2.. உலகளவில் செய்துள்ள வசூல்! விவரம் இதோ
Jailer 2 Worldwide Box office Collection: ஜெயிலர் 2 கடந்த மாதம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில், இன்று ஜெயிலர் 2 வெளியாகி 25-வது நாள். இதுவரை இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.
ஜெயிலர் 2
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிர்னா, யோகி பாபு, நமோ நாராயணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

ஜெயிலர் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஜெயிலர் 2 வெளியாகி, முதல் நாளிலிருந்தே பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. முக்கியமாக, ரூ. 700 கோடியை கடந்து தமிழ் சினிமாவின் புதிய இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக இடம் பிடித்துள்ளது. இதற்கு முன் 2.0 திரைப்படம் அந்த இடத்தை தக்கவைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
25-வது நாளில் ஜெயிலர் 2
ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு திரையரங்குகளில் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்தது என்பதை சொல்ல வார்த்தையே இல்லை. தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, வட இந்தியா மற்றும் வெளிநாடுகள் என ஒவ்வொரு திரையரங்கமும் திருவிழா கோலமாக மாறியது. இதனால், ஒவ்வொரு நாளையும் வெற்றிகரமாக கடந்து இன்று ஜெயிலர் 2 திரைப்படம் 25-வது நாளில் உள்ளது. தற்போதெல்லாம் ஒரு திரைப்படம் இரண்டு வாரங்களை கடப்பது என்பதே சவாலாக உள்ள நிலையில், ஜெயிலர் 2 25-வது நாளை கொண்டாடுகிறது என்பது கண்டிப்பாக மாபெரும் சாதனைதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஜெயிலர் 2 உலகளவில் வசூல் விவரம்
ஜெயிலர் 2 முதல் நாளிலிருந்து எவ்வளவு வசூல் செய்து வருகிறது; எந்தெந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பற்றி விரிவாக நாம் பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 25-வது நாளில் உள்ள ஜெயிலர் 2 இதுவரை செய்துள்ள வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 830+ கோடி வசூல் செய்துள்ளது.

பொறுப்பு துறப்பு: ஜெயிலர் 2 திரைப்படத்தின் வசூல் குறித்து இந்த பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.