பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் ஜெயிலர் 2 உலகளவில் செய்துள்ள வசூல்
Jailer 2 worldwide 3 days collection: ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகி 3 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், இதுவரை இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்ப்போம்.
ஜெயிலர் 2
தமிழ் சினிமாவின் உச்சம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த 15-ஆம் தேதி திரைக்கு வந்தது ஜெயிலர் 2. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாப் 5 திரைப்படங்களில் ஜெயிலர் 2-வும் ஒன்று. இதனால் முதல் நாளிலிருந்தே இப்படத்தின் வசூல் மாபெரும் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுவும், படத்திற்கு அனைத்து இடங்களிலும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைக்க, வசூல் வேட்டையாடி வருகிறது.
3 நாள் பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில், 3 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 325 கோடி வசூல் செய்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை, நாளை ஆயுத பூஜை, நாளை மறுநாள் விஜயதசமி என்பதால் தொடர் விடுமுறை நாட்கள் உள்ளன. கண்டிப்பாக இந்த விடுமுறை நாட்களில் ஜெயிலர் 2 மாபெரும் வசூல் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri