பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
Jailer 2 Worldwide Box office: ஜெயிலர் 2 திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாங்க.
ஜெயிலர் 2
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளியான திரைப்படம் ஜெயிலர் 2.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, வட இந்தியா, வெளிநாடுகள் என அனைத்து இடங்களிலும் இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பாக்ஸ் ஆபிஸ்
ஜெயிலர் 2 வசூல் குறித்து நாம் முதல் நாளிலிருந்தே பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 7 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 7 நாட்களில் ஜெயிலர் 2 உலகளவில் ரூ. 580 கோடி வசூல் செய்துள்ளது. ஒரே வாரத்தில் ரூ. 580 கோடி வசூலை கடந்திருக்கும் ஜெயிலர் 2 கண்டிப்பாக ரூ. 800 கோடிக்கும் மேல் வசூல் செய்து, இண்டஸ்ட்ரி ஹிட்டாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிகிறது.