பாக்ஸ் ஆபிஸ்: 8 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
Jailer 8 Worldwide 8 days collection: ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் 8 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.
ஜெயிலர் 2
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ஜெயிலர் 2.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
ஜெயிலர் 2 ஒவ்வொரு நாளும் எவ்வளவு வசூல் செய்கிறது என்பது குறித்து தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தற்போது 8 நாட்களில் ஜெயிலர் 2 உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜெயிலர் 2 திரைப்படம் 8 நாட்களில் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.