ரெடின் கிங்ஸ்லி காமெடியன் மட்டுமில்லை.. இவ்வளவு பெரிய கோடீஸ்வரரா?
கோலமாவு கோகிலா படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. அவர் பேசும் விதத்திற்கே பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ரெடின் அதற்கு பிறகு நெல்சனின் டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் சமீபத்தில் வந்த ஜெயிலர் படத்திலும் அவர் நடித்து இருந்தார்.
கோடீஸ்வரரா?
ரெடின் கிங்ஸ்லி படங்களில் காமெடியனாக நடித்தாலும் அவர் நிஜத்தில் ஒரு கோடீஸ்வரரர் என்கிற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
அவர் பற்றி பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் பேசும்போது ரெடின் தமிழ்நாடு முழுக்க கண்காட்சி நடத்தும் தொழில் செய்து வருகிறார் எனவும், அதன் மூலம் அவர் அதிகம் சம்பாதிக்கிறார் என்றும் கூறி இருக்கிறார்.
மேலும் அவர் அதிகம் மதிப்புள்ள சொகுசு காரையும் வைத்திருக்கிறாராம்.