ஜெயிலர் vs லியோ... இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம் எது பாருங்க

By Parthiban.A Dec 12, 2023 02:07 AM GMT
Report

2023ல் வெளிவந்த படங்களில், தமிழ் சினிமாவில் ஜெயிலர் மற்றும் லியோ ஆகிய படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தன.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வந்து 600 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலர் படமும் பெரிய ஹிட் ஆனதால், தயாரிப்பாளர் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு சொகுசு கார் கிப்ட் ஆக கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கும் கார்கள் பரிசாக தரப்பட்டது.

ஜெயிலர் vs லியோ... இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம் எது பாருங்க | Jailer Leo Year In Search 2023 Most Searched Film

2023ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம்

தற்போது கூகுள் நிறுவனம் 2023ம் வருடத்தில் அதிகம் தேடப்பட்ட படங்கள் லிஸ்ட்டை வெளியிட்டு இருக்கிறது. அதில் ஷாருக் கானின் ஜவான் இந்திய அளவில் முதல் இடம் பிடித்து இருக்கிறது. மேலும் அது உலகளவில் 3ம் இடம் பிடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் நான்காம் இடமும், ஷாருக்கின் பதான் 5ம் இடமும் பிடித்து இருக்கின்றன.

ஜெயிலர் படம் 7ம் இடம் பிடித்து தமிழ் சினிமாவில் அதிகம் தேடப்பட்ட படமாக மாறி இருக்கிறது. அடுத்து 8வது இடத்தில் விஜய்யின் லியோ, மற்றும் 10ம் இடத்தில் வாரிசு ஆகிய படங்கள் இடம்பெற்று இருக்கின்றன.  

ஜெயிலர் vs லியோ... இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம் எது பாருங்க | Jailer Leo Year In Search 2023 Most Searched Film

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US