வாரிசு, துணிவு வசூலை அடித்து நொறுக்கிய ஜெயிலர்.. முதல் நாள் வசூல் மட்டுமே எவ்வளவு தெரியுமா

Report

ஜெயிலர்

பெரிதும் எதிர்பார்ப்பில் நேற்று உலகளவில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

வாரிசு, துணிவு வசூலை அடித்து நொறுக்கிய ஜெயிலர்.. முதல் நாள் வசூல் மட்டுமே எவ்வளவு தெரியுமா | Jailer Movie Beats Varisu And Thunivu Collection

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோஃப், வசந்த் ரவி, தமன்னா என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

முதல் நாள் வசூல் 

இந்நிலையில், உலகளவில் இப்படம் ரூ. 90 கோடி முதல் ரூ. 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

வாரிசு, துணிவு வசூலை அடித்து நொறுக்கிய ஜெயிலர்.. முதல் நாள் வசூல் மட்டுமே எவ்வளவு தெரியுமா | Jailer Movie Beats Varisu And Thunivu Collection

இதன்மூலம், விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என இரு திரைப்படங்களின் முதல் நாள் தமிழக வசூல் சாதனையை அடித்து நொறுக்கியுள்ளது ஜெயிலர். இனி வரும் நாட்களில் தொடர்ந்து பல வசூல் சாதனைகளை ஜெயிலர் திரைப்படம் செய்யும் என கூறப்படுகிறது.

ஜெயிலர் திரைப்படம் எந்தெந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த விவரம் இதோ..

தமிழ்நாடு = ரூ. 25 கோடி

கர்நாடகா = ரூ. 11.85 கோடி

கேரளா = ரூ. 6 கோடி

ஆந்திரா மற்றும் தெலுங்கானா = ரூ. 11.5 கோடி

ரெஸ்ட் ஆஃப் இந்தியா = ரூ. 3 கோடி

வெளிநாடு = ரூ. 42 கோடி

மொத்தம் உலகளவில் ரூ. 99.35 கோடிக்கும் மேல் வசூல் செய்து, ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட்டை நெருங்கியுள்ளது.

ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடிக்க பல கோடி சம்பளம் வாங்கிய மோகன் லால்!.. எவ்ளோ தெரியுமா? 



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US