ஜெயிலர் பட வில்லன் விநாயகன் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?- கவனித்துள்ளீர்களா?
ஜெயிலர்
தமிழ் சினிமாவில் பட்டய கிளப்பி வரும் படம் ஜெயிலர். ரஜினி அண்ணாத்த படம் கொஞ்சம் டல் அடித்தாலும் அதன்பிறகு வந்துள்ள ஜெயிலர் நாளுக்கு நாள் வசூலில் மாஸ் காட்டி வருகிறது.
முதல் நாளிலேயே ரூ. 100 கோடியை எட்டிய இப்படம் தற்போது வரை உலகம் முழுவதும் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
படத்தில் சின்ன சின்ன வேடத்தில் நடிக்க பிரபலங்களுக்கு கூட நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வில்லன் நடித்த படங்கள்
இந்த படத்தில் ரஜினிக்கு ஈடுகொடுக்கும் ஒரு மாஸ் வில்லனாக நடித்திருப்பவர் தான் விநாயகன். கோரளாவை பூர்வீகமாக கொண்ட விநாயகன் பிளாக் மெர்குரி என்ற பெயரில் நடனக்குழு ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், நடன இயக்குனர் என பன்முகம் கொண்ட இவர் தமிழை தாண்டி மலையாளத்திலும் படங்கள் நடித்திருக்கிறார். கம்மட்டிபாடம் என்ற மலையாள படத்தில் கங்காவாக நடித்து பல விருதுகள பெற்றார்.
இவர் சிறந்த நடிகருக்கான விருது, அமெரிக்க திரைப்பட விருது, சினிமா பாரடிசோ கிளப் சினி விருது என விருதுகளை பெற்றுள்ளார். தமிழில் விஷால் நடித்த திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டி அடியாளாக மாற்றுத்திறனாளியாக நடித்திருந்தார்.
அதன்பின் சிலம்பாட்டம், காளை, சிறுத்தை, மரியான் போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து பெரிய ரீச் பெற்று வருகிறார்.
மொத்தமாக ரஜினியின் ஜெயிலர் படம் செய்துள்ள வசூல்- எல்லா இடமும் அதிரடி, வசூலில் சரவெடி தான்