ஒரே பெயர்.. மூன்று படங்கள்.. எல்லாமே சூப்பர்ஹிட்! - இது தெரியுமா?
ஒரு படத்திற்கு தலைப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால், தலைப்பை வைத்து தான் எந்த விதமான படம் என்பதை ரசிகர்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
ஒரே பெயரில் பல படங்கள் வருவதும் தற்போதைய காலகட்டத்தில் சகஜமாகிவிட்டது. பழைய படங்களில் டைட்டிலை தற்போது மீண்டும் பயன்படுத்தும் பழக்கமும் அதிகரித்து வருகிறது.
ஆனால் ஒரே பெயரில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன மூன்று திரைப்படங்களை பற்றி தெரியுமா? ஆம், அது எந்த திரைப்படம் என்பதை குறித்து பார்க்கலாம்.
இந்த மூன்று திரைப்படங்களும் ஜெயிலர் என்ற பெயரில் எடுக்கப்பட்டவை.
‘ஜெயிலர்’ திரைப்படம் முதன்முதலில் 1938ஆம் ஆண்டு சோராப் மோடி இயக்கத்தில் வெளியானது. இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்து, 1958ஆம் ஆண்டு ‘ஜெயிலர்’ திரைப்படம் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தையும் சோராப் மோடி இயக்கியும், தயாரித்தும் உள்ளார். அதேபோல் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
மூன்றாவது முறையும், ஜெயிலர் என்ற பெயரில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2023 - ம் ஆண்டு வெளிவந்தது. அப்போதும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
