Exclusive: பிரம்மாண்ட ஹிட் ஆன ஜெயிலர் OTT ரிலீஸ் தேதி! எப்போது தெரியுமா?
சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவான ஜெயிலர் படம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் ரிலீஸ் ஆன நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தது.
தற்போது வரை உலகம் முழுக்க ஜெயிலர் படம் 600 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூல் குவித்து இருக்கிறது.
ஜெயிலர் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பிரம்மாண்ட லாபம் கிடைத்து இருக்கிறது. அதில் ஒரு பங்கை சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு செக் கொடுத்து இருக்கின்றனர். அது மட்டுமின்றி BMW சொகுசு கார் ஒன்றையும் ரஜினிக்கு கிப்ட் ஆக கொடுத்து இருக்கிறார் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்.
OTT ரிலீஸ் தேதி
ஜெயிலர் படம் தற்போதும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தான் ரசிகர்கள் எல்லோரும் வெயிட்டிங்.
சன் நெக்ஸ்ட் (SunNxt) ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 7ம் தேதி ஜெயிலர் படம் வெளியாக இருக்கிறது. ஓடிடியிலும் ஜெயிலர் படம் பல சாதனைகள் படைக்கும் என எதிர்ப்பார்க்கப்டுகிறது.
SunNxt தளத்திற்கு புதிதாக subscribe செய்து ஜெயிலர் படத்தை பார்க்க இந்த போஸ்டரை க்ளிக் செய்யவும்.

