இப்போது ஒரே இடத்தில் ரஜினி மற்றும் அஜித்- பரபரப்பின் உச்சம், ஏக்கத்தில் ரசிகர்கள்
ரஜினி-அஜித்
இருவருமே தமிழ் சினிமாவிற்கு ஏன் இந்திய சினிமாவிற்கே முக்கிய பிரபலங்கள். இவர்களின் படங்கள் தமிழில் மட்டும் இல்லை இந்தியா முழுவதுமே ரிலீஸ் ஆகி கலக்கும்.
இப்போது ரஜினியின் ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்க தயாராகி வருகிறது. அனிருத் இசையமைக்கிறார், அண்மையில் இப்படத்தில் வில்லனாக கன்னட நடிகர் சிவராஜ்குமார் கமிட்டாகி இருப்பதாக செம தகவல் வந்தது.
அதேபோல் அஜித்தின் துணிவு படம் பொங்கல் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது, தமிழகத்தில் மட்டுமே 800 திரையரங்குகளை பிடித்திருப்பதாக கூறப்படுகிறது.
ஒரே இடத்தில் பிரபலங்கள்
தற்போது ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. அதாவது ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பும், அஜித்தின் துணிவு பட படப்பிடிப்பும் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெறுகிறதாம்.
இதனால் ரசிகர்கள் அஜித்-ரஜினி சந்திப்பு நடைபெறுமா, புகைப்படம் வருமா என ரசிகர்கள் பரபரப்பின் உச்சத்தில் உள்ளார்கள்.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
