ஜெயிலர் படத்தின் இறுதி வசூல் இது தான்.. இதை முறியடிக்குமா லியோ
ஜெயிலர்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளிவந்த படம் ஜெயிலர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷராப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன் என மாபெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் முதல் நாளில் இருந்து உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வந்தது. இதுவரை தமிழ் சினிமாவில் எதிர்பார்க்காத வசூலை ஜெயிலர் படம் செய்தது.
அது மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனத்திற்கு அதிக லாபத்தையும் ஜெயிலர் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் அனிருத்-க்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், படத்தில் பணிபுரிந்த நபர்களுக்கு தங்க நாணயம் பரிசாக கலாநிதி மாறன் வழங்கினார்.
வசூல் விவரம்
இந்நிலையில், தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக இருக்கும் ஜெயிலர் இறுதியாக ரூ. 635 கோடி வசூல் செய்துள்ளது. இதில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை வரிசையாக பார்க்கலாம் வாங்க.
தமிழ்நாடு - ரூ. 205 கோடி
தெலுங்கு - ரூ. 88 கோடி
கேரளா - ரூ. 58.50 கோடி
கர்நாடகா - ரூ. 71. 50 கோடி
இந்தியாவில் எஞ்சியிருக்கும் மற்ற இடங்களில் - ரூ. 17 கோடி
வெளிநாடு - ரூ. 195 கோடி
மொத்தத்தில் - ரூ. 635 கோடி
முறியடிக்குமா லியோ
இந்த வசூல் சாதனையை, அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் விஜய்யின் லியோ திரைப்படம் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏனென்றால் லியோ படம் உலகளவில் ரூ. 487 கோடி வரை பிசினஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், கண்டிப்பாக ரூ. 600 முதல் ரூ. 700 கோடி வரை வசூல் வரும் என திரை வட்டாரத்தில் உள்ள முக்கிய நபர்கள் கூறி வருகிறார்கள். என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
You May Like This Video