ஜமா படத்தின் விமர்சனம்.. படம் பார்த்தவர்களின் பதிவு
ஜமா
எதார்த்தமான கதைக்களத்தில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் தான் ஜமா. நேற்று ஆகஸ்ட் 2ஆம் தேதி மழை பிடிக்காத மனிதன், நண்பன் ஒருவன் வந்தபிறகு, பேச்சி, BOAT, ஜமா என பல திரைப்படங்கள் வெளிவந்தன.
[3ZNEJH ]
இதில் மக்கள் மத்தியில் சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது ஜமா. இப்படத்தை பாரி இளவழகன் என்பவர் இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக அம்மு அபிராமி நடித்துள்ளார்.
மேலும் சேத்தன், வசந்த் மாரிமுத்து, ஸ்ரீ கிருஷ்ண தயாள் என பலரும் நடித்துள்ளனர். தெருக்கூத்து கலைஞர்களை மையப்படுத்தி இப்படத்தை எடுத்துள்ளனர். நேற்று இப்படத்தில் முதல் ஷோவில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ஜமா.
இந்த நிலையில், இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறிய விமர்சனங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
படம் பார்த்தவர்களின் விமர்சனம்
இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ், "தெருக்கூத்து கலைஞர்களின் மிக அழகான கதையை நமக்கு காட்டும் உண்மையான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் படம்" என தனது விமர்சனத்தை கூறியுள்ளார். மேலும் படக்குழுவிற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
Wishing the best to the team of #Jama. Watched this amazing movie. Its an authentic and impactful film that shows us a very beautiful story of Therukoothu artists. A film that is made with a lot of heart.
— karthik subbaraj (@karthiksubbaraj) August 2, 2024
Well directed and performed by @PariElavazaghan 👏
Loved Raja sir's… pic.twitter.com/U4KQlYz5H8
நடிகை நந்தினி என்பவர், "ஜமாவைப் பார்ப்பது உண்மையிலேயே ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையும், அவர்களின் கலையின் மீதான அன்பும் அர்ப்பணிப்பும் மற்ற ஒவ்வொரு படைப்பாளியும் உணர்வுபூர்வமாக இணைக்கும் ஒன்று. இளையராஜா சாரின் இசை அதை வேறொரு நிலைக்கு உயர்த்தியது" என கூறியுள்ளார்.
Watching #Jama was truly a wonderful experience. The lives of Therukoothu artists, and their love & dedication for their art is something every other creator would emotionally connect to. Ilayaraja sir's music elevates it to another level! pic.twitter.com/Ffd4N6VkA1
— Nandhini JS (@nandhini_js) August 2, 2024
#Jama Review:
— Sugumar Srinivasan (@Sugumar_Tweetz) August 3, 2024
A village drama with Excellent 1st Half followed by a very good 2nd Half
Positives : Pari Elavazhagan & Chetan Performance, Ilayaraja music, Pre interval sequence , Climax sequence
Applause for Director for the way he handle the script
Verdict : Superhit 💥 pic.twitter.com/BuBRrEJEQo