பிக்பாஸ் டைட்டிலை பெற ஒரு தகுதி வேண்டாமா?- அர்ச்சனா குறித்து பேசிய ஜேம்ஸ் வசந்தன்
பிக்பாஸ் 7
விறுவிறுப்பின் உச்சமாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி நடந்து வருகிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இதில் நிறைய மாற்றங்கள், முதலில் 2 வீடு, அடுத்து வித்தியாசமான டாஸ்க், அடுத்தடுத்து டபுள் எவிக்ஷன், நிறைய வைல்ட் கார்ட்டு என்ட்ரி என நிறைய நடந்துவிட்டது.
அடுத்து 20 நாட்களில் இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஜேம்ஸ் வசந்தன்
பிரபல இசையமைப்பாளரும், தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் நிறைய பொதுவான விஷயங்கள் குறித்து தனது கருத்துக்களை கூறுவது வழக்கம். அப்படி அவர் அண்மையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்கள் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், பிக்பாஸில் அர்ச்சனா புகைப்பிடிக்கும் விஷயம் அதிகம் பேசப்படுகிறது, அவர் புகை பிடிப்பது பெரிய விஷயம் கிடையாது.
ஆனால் பட்டத்தை வெல்பவர்களுக்கு ஒரு நல்ல தகுதி இருக்க வேண்டும்.
அந்த வகையில் விசித்ரா, மணி, அர்ச்சனா, பூர்ணிமா, மாயா இவர்களில் பார்க்கும் போது ஒரு நல்ல ரோல் மாடலாக இருப்பார் என்றால் அது விசித்ரா மட்டும் தான், அவருக்கு பட்டத்தை கொடுக்கலாம் என கூறியுள்ளார்.
You May Like This Video

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; நல்லா இருக்குய்யா உங்க ரகசிய கூட்டு - விஜய்யை வெளுத்த பிரபலம் IBC Tamilnadu
