தப்பு பண்ணவங்க எல்லாம் நல்லா இருக்காங்க.. சின்மயிக்கு ஆதரவாக வந்த இசையமைப்பாளர்
பாடகி சின்மயி 2018ல் வைரமுத்து மீது சொன்ன மீ டூ புகார் காரணமாக அதன் பிறகு பல சிக்கல்களை சந்தித்தார்.
அதன் பிறகு அவர் தமிழ் சினிமாவில் பாட தடை விதிக்கப்பட்டது. அவர் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கடந்த 7 வருடங்களாக அவர் தமிழில் எந்த பாடலும் பாடவில்லை.
சமீபத்தில் அவர் தக் லைப் பட விழாவில் முத்த மழை பாடலை பாடியது பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அவரை பாடவிடாமல் தடுக்கும் ராதாரவி உள்ளிட்டோர் மீது அதன் பிறகு பலரும் கடும் விமர்சனம் வைத்து வருகிறார்கள்.
ஜேம்ஸ் வசந்தன் ஆதரவு
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அளித்த பேட்டியில் சின்மயிக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.
"ஒரு பெண் சும்மா வந்து இப்படி ஒரு புகார் சொல்வாரா. தப்பு செய்தவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள். அந்த ரெண்டு பேரு நல்ல இருக்காங்க."
"சின்மயி பாட உரிமையை மக்கள் தான் போராடி வாங்கி கொடுக்க வேண்டும்" என ஜேம்ஸ் வசந்தன் கூறி இருக்கிறார். முழு பேட்டி இதோ.

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu

வட கொரியாவின் நான்கு கொடூர முகாம்கள்... செத்துப்பிழைக்கும் 65,000 கைதிகள்: அதிர்ச்சி பின்னணி News Lankasri
