ஜனநாயகனுக்கு கிடைக்காத சென்சார் சான்றிதழ்.. என்ன செய்யப்போகிறார் தயாரிப்பாளர்?
வழக்கமாக விஜய் படங்களுக்கு பிரச்சனைகள் வரிசைகட்டி வரும். கடந்தகாலத்தில் அவரது பல படங்கள் இப்படி சர்ச்சைகளையும் பிரச்னைகளையும் சந்தித்து இருக்கின்றன.
தற்போது விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்டு இருக்கும் ஜனநாயகன் படமும் அதில் விதிவிலக்காக இருக்கப்போவதில்லை என தெரிகிறது.
படத்தை முழுமையாக முடித்து சென்சாருக்கு கடந்த மாதமே அனுப்பிவிட்டனர். படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்தில் சில கட் சொல்லி இருக்கின்றனர்.

இன்னும் கிடைக்காத சான்றிதழ்
மாற்றங்களை செய்து படத்தினை மீண்டும் சென்சார் போர்டுக்கு அனுப்பிவிட்ட நிலையில் இன்னும் சென்சார் சான்றிதழை வழங்காமல் இருக்கின்றனர்.
ரிலீசுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் நீதிமன்றத்தை நாட ஜனநாயகன் தயாரிப்பாளர் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் இன்னும் டிக்கெட் முன்பதிவு கூட தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Super Singer 11: சூப்பர்சிங்கரில் ஐந்தாவது ஃபைனலிஸ்டாக சென்றது யார்? அரங்கமே கண்ணீரில் ஆழ்ந்த தருணம் Manithan
போதுமான உணவு, மருந்துகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்... பிரித்தானிய மக்களுக்கு ஆலோசனை News Lankasri