ஜனநாயகன் விழாவுக்கு எத்தனை ஆயிரம் பேர் வருகிறார்கள் தெரியுமா?
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக விஜய், பூஜா ஹெக்டே, அனிருத், இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட பலர் நேற்று விமானத்தில் மலேசியாவுக்கு சென்றனர்.
கோலாலம்பூரில் இருக்கும் Bukit Jalil National Stadiumல் தான் மிக பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடக்கிறது.
அனிருத் இசை கச்சேரி உடன் இசை வெளியீட்டு விழாவை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்து இருக்கின்றனர்.

எவ்வளவு பேர்?
மலேசியா செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அனிருத், இது One last dance என கூறி இருக்கிறார். விஜய்யின் கடைசி படம் இது என்பதால் அவர் இதை கூறி இருக்கிறார்.
மேலும் விழாவில் 80 ஆயிரம் ரசிகர்கள் கலந்துகொள்ளல் இருக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
